/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புத்தேந்தலில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டு குடிநீர்
/
புத்தேந்தலில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டு குடிநீர்
புத்தேந்தலில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டு குடிநீர்
புத்தேந்தலில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டு குடிநீர்
ADDED : ஏப் 27, 2024 04:16 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே புத்தேந்தலில் மறுசீரமைப்பு பணியில் குழாய் சேதமடைந்து பல நாட்களாக வயல் வெளியில் பாய்ந்து குடிநீர் வீணாகிறது.
ராமநாதபுரம் நகர், கிராமப்பகுதிகளுக்கு காவிரி கூட்டுகுடிநீர் குழாய் வழியாக விநியோகம் செய்கின்றனர். தற்போது மறுசீரமைப்பு பணிகள் புத்தேந்தல் -உத்தரகோசமங்கை ரோட்டில் நடக்கிறது.
இதற்காக குழி தோண்டிய போது குழாய் சேதமடைந்து காவிரி குடிநீர் பல நாட்களாக வீணாகி அருகில் உள்ள வயல்வெளியில் தேங்கியுள்ளது. கோடை காலத்தில் மக்கள்குடிநீருக்காக சிரமப்படும் வேளையில் அதன் அவசியத்தை கருத்தில் கொண்டு உடனடியாக சேதமடைந்து குழாய்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.