/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி நீர் கானல் நீரா; ஏர்வாடி மக்கள் அவதி
/
காவிரி நீர் கானல் நீரா; ஏர்வாடி மக்கள் அவதி
ADDED : மார் 28, 2024 10:58 PM
கீழக்கரை : ஏர்வாடி ஊராட்சிபகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
ஏர்வாடி ஊராட்சியில் சின்ன ஏர்வாடி, சேர்மன் தெரு, ஏரான்துறை, கல்பார், பிச்சை மூப்பன் வலசை, முத்தரையர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல மாதங்களாக காவிரி குடிநீர் கானல் நீராக உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சேர்மன் தெரு பொதுமக்கள் கூறியதாவது:
காவிரி குடிநீர் தெருக் குழாய்களில் விநியோகம் செய்யப்படாமல் முடங்கியுள்ளது. ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் முறையாக நடந்து வரும் நிலையில், எங்கள் பகுதியில் மட்டும் வராமல் உள்ளது வேதனை அளிக்கிறது.
குடம் தண்ணீர் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்துவதால் வருமானத்தின் ஒரு பகுதியை தண்ணீருக்கே செலவிட வேண்டிய நிலை உள்ளது. எனவே ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தினர் முறையாக ஆய்வு செய்து காவிரி குடிநீரை அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

