/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராம மக்களின் சொந்த முயற்சியில் ஊர் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா
/
கிராம மக்களின் சொந்த முயற்சியில் ஊர் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா
கிராம மக்களின் சொந்த முயற்சியில் ஊர் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா
கிராம மக்களின் சொந்த முயற்சியில் ஊர் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா
ADDED : மார் 04, 2025 06:26 AM

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே கடம்பன்குளத்தில் கிராம மக்களின் சொந்த முயற்சியில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஊர் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
கடம்பன்குளம் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு கால்நடை வளர்ப்பு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக கிராமத்தின் சார்பில் சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து கிராமத்தின் சொந்த செலவில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் செலவில் கடம்பன் குளம் கிராமம் முழுவதும் கண்காணிப்பதற்காக 9 சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா, கண்காணிப்பு அறையை முதுகுளத்துார் எஸ்.ஐ., சக்திவேல் திறந்து வைத்தார். உடன் கிராமதலைவர் முனியசாமி, நிர்வாகிகள் ராஜீவ், மணிகண்டன்,சுப்பிரமணியன் சதீஷ் குமார், விசுவநாத் பங்கேற்றனர்.
குற்றச் சம்பவங்களில் ஈடுபவர்களை பிடிப்பதற்காக சி.சி.டி.வி., கேமரா பயனுள்ளதாக இருக்கும் என போலீஸ் தரப்பில் கூறினார்.