/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சக்கர தீர்த்த மகா தீப ஆரத்தி மார்ச் 9-ல் நடக்கிறது
/
சக்கர தீர்த்த மகா தீப ஆரத்தி மார்ச் 9-ல் நடக்கிறது
சக்கர தீர்த்த மகா தீப ஆரத்தி மார்ச் 9-ல் நடக்கிறது
சக்கர தீர்த்த மகா தீப ஆரத்தி மார்ச் 9-ல் நடக்கிறது
ADDED : மார் 06, 2025 03:55 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் 6ம் ஆண்டு சக்கர தீர்த்த மகா தீப ஆரத்தி மார்ச் 9 மாலை நடக்கிறது.
அன்றைய தினம் மதியம் 2:00 மணிக்கு பசு மாடுகள் பாதுகாப்பு அமைப்பான கோபல்ஸ் சார்பில் கோபூஜை நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு இஸ்கான் பக்தி மார்க்கம் சார்பில் வீதி உலாவும் மாலை 6:00 மணிக்கு தீப ஆரத்தி, சங்கல்ப பூஜையும் 6:30 மணிக்கு தீப, துாப தொடர் ஆரத்தியும் நடக்கிறது. இரவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ராமேஸ்வரம் ராம சேது மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி குழு, தர்ம ரக்க்ஷண சமிதி, ஆன்மிக அமைப்புகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.