/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி சமுதாய கூடத்தில் அடிப்படை வசதிகள் குறைவு
/
சாயல்குடி சமுதாய கூடத்தில் அடிப்படை வசதிகள் குறைவு
சாயல்குடி சமுதாய கூடத்தில் அடிப்படை வசதிகள் குறைவு
சாயல்குடி சமுதாய கூடத்தில் அடிப்படை வசதிகள் குறைவு
ADDED : ஏப் 28, 2024 05:42 AM
சாயல்குடி : -சாயல்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பு 2010ல் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், அரசு சார்ந்த நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்துவதற்கும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
முன்பு கட்டணம் ரூ.1000 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.4500 வசூலிக்கப்படுகிறது.
சாயல்குடி சமுதாய கூடத்தில் கழிப்பறைகள் முறையாக பராமரிப்பின்றி உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
சுற்றிலும் காம்பவுண்ட் வசதி ஏற்படுத்தாததால் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்டவைகள் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் அருகே ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் மையமாக உள்ளது.
சாயல்குடி பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் விழாக்கள் நடத்துவதற்கும், அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தற்போது அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் செல்வதற்கான வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
குறைந்த கட்டணமாக இருப்பதால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
அடிப்படை வசதிகள் குறைவால் தனியார் திருமண மஹாலை தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் சமுதாய கூட்டத்தில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.

