/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் நுழைவு கட்டணம் 'பாஸ்டேக்' மூலம் வசூல் சோதனை
/
ராமேஸ்வரத்தில் நுழைவு கட்டணம் 'பாஸ்டேக்' மூலம் வசூல் சோதனை
ராமேஸ்வரத்தில் நுழைவு கட்டணம் 'பாஸ்டேக்' மூலம் வசூல் சோதனை
ராமேஸ்வரத்தில் நுழைவு கட்டணம் 'பாஸ்டேக்' மூலம் வசூல் சோதனை
ADDED : ஆக 22, 2024 02:34 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் நகருக்குள், நுழைய கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கோவில், தனுஷ்கோடி வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியரின் வாகனங்களுக்கு ராமேஸ்வரம் நகராட்சி டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்கிறது.
கார், வேனுக்கு 100, லாரிக்கு 150, அரசு பஸ்சுக்கு 8 ரூபாய் வசூலிக்கின்றனர். டெண்டர் விடப்பட்டு வசூல் நடந்து வந்தது. கடந்த இரு ஆண்டுகளாக நகராட்சி நேரடியாக வசூலித்தது.
ஆனால் தனியாருக்கு விட்ட ஏலத் தொகையை விட, கடந்த இரு ஆண்டுகளாக கட்டண வசூல் குறைந்தது.
டோல்கேட் வசூலில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதை தடுக்க பாஸ்டேக் அறிமுகப்படுத்துவதற்கு நகராட்சி முடிவு செய்தது. அதன்படி, நேற்று சோதனை முறையில் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஓரிரு நாளில் டோல்கேட்டில் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்படும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.