/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சனவேலியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
சனவேலியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 17, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு ஆணையாளர் லட்சுமி தலைமை வகித்தார். தி.மு.க.,ஒன்றிய செயலாளர் கண்ணன், யூனியன் தலைவர் ராதிகா, துணைத் தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) மலைராஜ் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டன. முகாமில் ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபு, யோகேஸ்வரன், ஊராட்சி தலைவர்கள் ஜெயபாரதி, கனிமொழி, கோபிநாத், முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.