/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துார்வாரி மண் எடுக்க தகுதியான நீர்நிலைகள் விபரம் சேகரிப்பு; ஊராட்சி ஒன்றியங்களில் கணக்கெடுப்பு துவக்கம்

ADDED : மே 28, 2024 06:17 AM
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 641 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1122 சிறு பாசன கண்மாய்கள், 3897 ஊருணிகள் என 5660 நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் பல சரிவர பராமரிக்கப்படாமல் சீமைக்கருவே மரங்கள் வளர்ந்தும், மண்மேவியும் காணப்படுகின்றன.
மழைக்காலத்திற்கு முன் நீர்நிலைகளை துார்வார வேண்டும்.
கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டும் வேளாண் பணிகளுக்கு மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து நடப்பாண்டில் துார்வார வேண்டிய நீர்நிலைகளை கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், ஊருணிகளை துார்வாரி விவசாயப்பணிகளுக்கு வண்டல், களி மண், கிராவல் மண் எடுத்துக் கொள்ள அரசிதழில் சிறப்பு வெளியீடு செய்துள்ளனர்.
இதற்காக ஊராட்சி ஒன்றியங்களில் மண்டல துணை பி.டி.ஓ.,கள் மேற்பார்வையில் மண் எடுக்க தகுதிவாய்ந்த கண்மாய், ஊருணிகளை கண்டறிந்து தாலுகா, கிராமத்தின் பெயர், மொத்த பரப்பு, அகற்ற பட வேண்டிய அளவு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்பும் பணி நடக்கிறது.
ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப் சிங் உத்தரவில் துார்வார வேண்டிய கண்மாய், ஊருணிகள் கண்டறியும் பணி நடக்கிறது. இதன் விபரங்களை விரைவில் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு, கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவில் கனிம வளத்துறையினர் உதவியுடன் தகுதியுள்ள கண்மாய், ஊருணிகளை துார்வாரி, விவசாயப் பணிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளது என்றனர்.