நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம் : முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அமைய உள்ள எலைட் பள்ளிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார்.
நடப்பு கல்வியாண்டில் புதியதாக எலைட் பள்ளி வரவுள்ளதால் அதற்கான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் விடுதி வசதி குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.