/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதைப்பொருள் விற்பனை கண்காணிக்க குழு அமைப்பு
/
போதைப்பொருள் விற்பனை கண்காணிக்க குழு அமைப்பு
ADDED : மார் 08, 2025 04:02 AM
கீழக்கரை : கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அருகே சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களை பிடிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி மற்றும் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா ஆகியோர் கூறியதாவது:
நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அருகே புகையிலை பொருட்கள், பீடி, சிகரெட் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதற்கு வற்புறுத்தவோ அல்லது விற்பனை செய்வதற்கோ முயற்சி செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
நகராட்சி சார்பில் வழங்கக்கூடிய வணிக உரிமம் ரத்து செய்யப்படும்.
ஒவ்வொரு பள்ளிகள்தோறும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரசாரம் செய்யப்படும் என்றனர்.