நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நுாறுக்கும்மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சாயல்குடி சமுதாயகூடத்தில் சமுதாய வளைகாப்பு நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் தலைமை வகித்தார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.
கர்ப்பிணிகளுக்கு வளையல்கள், மஞ்சள், குங்குமம், பழங்கள், தட்டு மற்றும் ஐந்து வகை உணவுகள் வழங்கப்பட்டது. கர்ப்ப கால பராமரிப்பு, தாய்ப்பாலின் முக்கியத்துவம், ஆரோக்கியமான உணவுகள் பற்றி டாக்டர்கள் பேசினர்.
கடலாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப் பாண்டியன் நன்றி கூறினார்.