/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியதாக புகார்: இருதரப்பில் 16 பேர் மீது வழக்கு

ADDED : மே 10, 2024 11:22 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சாம்பக்குளம் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் தொட்டி அமைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தொட்டியில் நிரம்பி வெளியேறும் தண்ணீரை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல சாம்பக்குளம் ஊராட்சி நிர்வாகிகள் சார்பில் குழாய் அமைக்கும் பணி நடந்தது.
அப்போது இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கீழத்துாவல் போலீசில் இரு தரப்பினரும் குவிந்தனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி மோதிக் கொண்டனர்.
முதுகுளத்துார் டி.எஸ்.பி.,சின்னக்கண்ணு தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் சமரசம் ஏற்படவில்லை. சாம்பக்குளம் ஊராட்சி தலைவர் கல்யாணி பால்ராஜ் மகன் சரத்குமார் புகாரில் இந்திரா நகர் முருகானந்தம், சங்கர் உட்பட 13 பேர் மீதும் பாலசுந்தரி புகாரில் சாம்பக்குளம் வாசுதேவன், பார்த்தசாரதி, சக்திமுருகன் மீது எஸ்.ஐ., முத்துமாணிக்கம் வழக்குப் பதிவு செய்து சக்திமுருகனை கைது செய்தனர்.