/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தடை செய்யப்பட்ட வலையில் பிடித்த ஒரு டன் மீன் பறிமுதல்
/
தடை செய்யப்பட்ட வலையில் பிடித்த ஒரு டன் மீன் பறிமுதல்
தடை செய்யப்பட்ட வலையில் பிடித்த ஒரு டன் மீன் பறிமுதல்
தடை செய்யப்பட்ட வலையில் பிடித்த ஒரு டன் மீன் பறிமுதல்
ADDED : ஆக 17, 2024 01:34 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே கீழமுந்தல் பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையில் பிடித்த ஒரு டன் மீன் பறிமுதல் செய்யப்பட்டது.
வாலிநோக்கம் அருகே கீழமுந்தல் பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி சிலர் மீன் பிடிப்பதாக ராமநாதபுரம் மீன் வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் மீன் வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அவர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது நாட்டுப்படகில் சுருக்குமடி வலையில் பிடித்த ஒரு டன் மீன்களை மற்றொரு படகுக்கு மாற்ற முயன்ற கீழமுந்தலை சேர்ந்த மணி மகன் கருப்பசாமி 35, தப்பி ஓடினார். அவரது படகில் இருந்த ஒரு டன் மீன்களை பறிமுதல் செய்த மீன் வள அமலாக்கத் துறையினர் மீன் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை ஏலம் விட்டு மீன் வளத்துறை அதிகாரிகள் மீன் வள துணை இயக்குநர் பிராபவதியிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
சுருக்குமடி வலையை பயன்படுத்தியதற்காக கருப்பசாமிக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் மீன் பிடிப்பதற்கான அனுமதியும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

