/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காங்., கட்சியை கண்டித்து பா.ஜ.,ஆர்ப்பாட்டம்: 30 பேர் கைது
/
காங்., கட்சியை கண்டித்து பா.ஜ.,ஆர்ப்பாட்டம்: 30 பேர் கைது
காங்., கட்சியை கண்டித்து பா.ஜ.,ஆர்ப்பாட்டம்: 30 பேர் கைது
காங்., கட்சியை கண்டித்து பா.ஜ.,ஆர்ப்பாட்டம்: 30 பேர் கைது
ADDED : மே 10, 2024 11:31 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பா.ஜ., கட்சியினர் காங்., கட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு காங்., கட்சியின் மக்களை பிரித்தாளும் போக்கை கண்டித்து பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் முத்துச்சாமி, மாவட்ட செயலாளர் கலையரசி, பொருளாதார பிரிவு மாநில செயலாளர் பிரபாகரன், ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் சண்முகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாகு, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் குமரன், செயலாளர்கள் கார்த்திக், மலைக்கண்ணன், போகலுார் ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ராமநாதபுரம் நகர் தலைவர் கார்த்திகேயன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசில் முறையாக அனுமதி பெறாத நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 30 பேரை போலீசார் கைது செய்தனர். பின் மாலையில் விடுவித்தனர்.