நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: -திருப்புல்லாணி அருகே குப்பச்சி வலசையில் கருப்பண்ணசாமி, ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று நேற்று முன்தின மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.
நேற்று காலை யாக வேள்வி நிறைவுக்கு பின்னர் கோயில் சிவாச்சாரியார்களால் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.