
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கீழக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோயில், கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகளும், கோ பூஜையும் நடைபெற்றன. பின்பு புனித கும்பகலச நீர் சிவாச்சாரியார்களால் ஊர்வலமாக எடுத்து கோயிலை வலம் வந்தனர்.
கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் மாரியம்மனுக்கு புனித நீரில் அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கினர்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.