/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேரிருவேலி செல்லும் வழியில் புதிய ரோடு அமைக்கும் பணி
/
தேரிருவேலி செல்லும் வழியில் புதிய ரோடு அமைக்கும் பணி
தேரிருவேலி செல்லும் வழியில் புதிய ரோடு அமைக்கும் பணி
தேரிருவேலி செல்லும் வழியில் புதிய ரோடு அமைக்கும் பணி
ADDED : மே 28, 2024 05:22 AM

முதுகுளத்துார், : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே தேரிருவேலி ரோட்டில் இருந்து புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது.
முதுகுளத்துாரில் இருந்து காக்கூர், தேரிருவேலி, உத்தரகோசமங்கை, வழியாக ராமநாதபுரம் செல்லும் ரோட்டில் முதுகுளத்துார் --- தேரிருவேலி ரோட்டில் இருந்து 1 கி.மீ.,க்கு மேல் புதிதாக தார்ரோடு அமைக்கும் பணி நடந்தது.
இதற்காக பழைய ரோட்டை தோண்டி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சமன் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ரோடு அமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளது.
ஏழு நாட்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக டூவீலரில் சென்றவர் மீது லாரி ஏறியதில் பலியானார். புதிய ரோட்டில் ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன்எதிரொலியாக ஜல்லிகற்கள் சமன் செய்து புதிய தார் ரோடு அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது.