
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுமடத்தில் கட்டட தொழிலாளி செல்வத்தை 38, கத்தியால் குத்திக்கொலை செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேவுள்ள தேனுார் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி மகன் செல்வம்.
இவர் புதுமடத்தில் தங்கி கட்டட தொழிலாளி மற்றும் மேஸ்திரியாக பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு செல்வத்திற்கும் உடன் தங்கிய தொழிலாளர்களுக்கும் மது போதையில் தகராறு நடந்தது.
ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் உள்ளூர் நபர்களையும் அழைத்துச்சென்று செல்வத்தை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பினர்.
இதுதொடர்பாக மூவரை உச்சிப்புளி போலீசார் தேடி வருகின்றனர். செல்வத்திற்கு மனைவி கீதா 35, ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

