/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய் ஓடையில் இறந்து கிடக்கும்மாடு: துர்நாற்றத்தினால் மக்கள் அவதி

ADDED : மார் 14, 2025 07:15 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை கண்மாய் ஓடையில் கன்றுகுட்டி ஒன்று இறந்து பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
சக்கரக்கோட்டை பெரியார் நகர், நுார்நகர் பகுதியில் கண்மாய்க்குரிய ஓடைகள் பராமரிக்கப்படாமல் உள்ளன. இப்பகுதியில் பன்றிகள், மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு கீழக்கரை ரோட்டில் உள்ள தனியார் விடுதி அருகே ஓடையில் கன்றுகுட்டி தவறிவிழுந்து இறந்து கிடக்கிறது.
இதுவரை அகற்றப்படாததால் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பெரியார்நகர் பூமிநாதன் கூறுகையில், கன்றுக் குட்டி இறந்து கிடப்பது குறித்து பொதுப்பணித்துறை, ஊராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை அகற்றவில்லை.
இப்பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. நோய்த் தொற்று அச்சத்தில் உள்ளோம். எனவே கன்றுகுட்டியை அகற்றி ஓடையை சுத்தம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.--