/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலோரம் ஒதுங்கும் புற்களால் மீனவர்களின் வலை பாதிப்பு
/
கடலோரம் ஒதுங்கும் புற்களால் மீனவர்களின் வலை பாதிப்பு
கடலோரம் ஒதுங்கும் புற்களால் மீனவர்களின் வலை பாதிப்பு
கடலோரம் ஒதுங்கும் புற்களால் மீனவர்களின் வலை பாதிப்பு
ADDED : செப் 18, 2024 05:26 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிழக்கு கடற்கரையில் ஒதுங்கும் கடற்புற்கள் வலையில் சிக்குவதால் அவற்றை அகற்ற மீனவர்கள் சிரமப்படுகின்றனர்.
கிழக்கு கடற்கரை பகுதிகளான தேவிபட்டினம், பனைக்குளம், ஆற்றங்கரை, திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, கடலுார் ஆகிய இடங்களில் மீனவ குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்கள் நாட்டுப் படகுகளில் குறிப்பிட்ட தொலைவில், வலை விரித்து மீன்பிடித்து விற்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக கிழக்கு பகுதி கடல் உட்பகுதியில் இருந்து வீசும் கீழைக்காற்று அதிகரித்துள்ளது.
இதனால், கடல் உள்பகுதியில் வளர்ந்துள்ள கடற்புற்கள் அதிகளவில் காற்றின் திசையில் அடித்து வரப்பட்டு கிழக்கு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி வருகின்றன.
மீனவர்கள் வலை விரித்துள்ள நிலையில், கீழை காற்றின் காரணமாக அதிக அளவில் கடற்புற்கள் மீனவர்களின் வலைகளில் சிக்கி வருவதால், மீனவர்கள் மீன்பிடி வலைகளை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வலைகளில் சிக்கும் புற்களால் மீன்கள் குறைந்த அளவே கிடைத்து வருவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.