/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊருணி கரைப்பகுதி சேதம்.. தண்ணீரை தேக்க வழியில்லை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : ஜூலை 08, 2024 06:11 AM

சிக்கல் : சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜபுரத்தில் கரைப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ள ஊருணியால் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்க வழியின்றி உள்ளது.
காமராஜபுரம் தெற்கு ஊருணி 3 ஏக்கரில் அமைந்துள்ளது. கடந்த 2023 டிச., மாதத்தில் பெய்த தொடர் மழையால் ஊருணி நிரம்பியது.
கரைப்பகுதி பலமின்றி 10 அடி அகலத்திற்கு உடைப்பெடுத்து தண்ணீர் வெளியேறியது.
ஆண்டு கணக்கில் தண்ணீர் தேங்கிய நிலையில் தற்போது ஊருணியில் தண்ணீர் தேக்க வழியின்றி வரத்து கால்வாய் உள்ளது.
சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
காமராஜபுரத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் நாகராஜன் கூறியதாவது: ஊருணி கரைப்பகுதி சேதமடைந்துள்ளது.
வரக்கூடிய மழை காலத்திற்கு முன்பாகவே மராமத்து பணிகளை செய்தால் தண்ணீர் முழுமையாக தேக்கிட வழி கிடைக்கும். எனவே கடலாடி யூனியன் அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.