/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாலத்தில் தடுப்புசுவர் சேதம்; விபத்து அச்சத்தில் மக்கள்
/
பாலத்தில் தடுப்புசுவர் சேதம்; விபத்து அச்சத்தில் மக்கள்
பாலத்தில் தடுப்புசுவர் சேதம்; விபத்து அச்சத்தில் மக்கள்
பாலத்தில் தடுப்புசுவர் சேதம்; விபத்து அச்சத்தில் மக்கள்
ADDED : ஆக 12, 2024 11:56 PM

கமுதி : கமுதி அருகே சின்ன ஆனையூர் கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் உள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.
சின்ன ஆனையூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
கமுதி-- முதுகுளத்துார் சாலை பேரையூர் அருகே ஆனையூர் முக்கு ரோட்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் சின்ன ஆனையூர் உள்ளது.
இவ்வழியில் வரத்து கால்வாய் இருப்பதால் தண்ணீர் செல்லும் போது கிராம மக்கள் கடந்து செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. பின்பு முறையாக மராமத்து பணி செய்யப்படவில்லை.
தற்போது பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
பாலம் விரிசலடைந்து இருப்பதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.
எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இவ்வழியில் செல்லாமல் கிராம மக்கள் 5 கி.மீ., சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது.
எனவே சின்ன ஆனையூர் கிராமத்திற்கு செல்லும் பாலத்தை மராமத்து பணி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.