/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இளையான்குடி ரோட்டோரத்தில் சீமைகருவேல மரத்தால் ஆபத்து
/
இளையான்குடி ரோட்டோரத்தில் சீமைகருவேல மரத்தால் ஆபத்து
இளையான்குடி ரோட்டோரத்தில் சீமைகருவேல மரத்தால் ஆபத்து
இளையான்குடி ரோட்டோரத்தில் சீமைகருவேல மரத்தால் ஆபத்து
ADDED : மே 19, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பெரிய கண்மாய் பாலம், செங்குடி, வரவணி வழியாக இளையான்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.
இந்த ரோட்டின் வழியாக அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். இந்நிலையில் பெரிய கண்மாய் பாலம் முதல் வரவணி, வண்டல் பகுதிகளில் ரோட்டில் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.
இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே ரோட்டோரத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.