/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சனவேலி கொக்கூரணி ரோட்டில் பள்ளத்தால் விபத்து அபாயம்
/
சனவேலி கொக்கூரணி ரோட்டில் பள்ளத்தால் விபத்து அபாயம்
சனவேலி கொக்கூரணி ரோட்டில் பள்ளத்தால் விபத்து அபாயம்
சனவேலி கொக்கூரணி ரோட்டில் பள்ளத்தால் விபத்து அபாயம்
ADDED : செப் 12, 2024 04:38 AM

ஆர்.எஸ்.மங்கலம்: தேசிய நெடுஞ்சாலை சனவேலி பாலத்தில் இருந்து கொக்கூரணி செல்லும் ரோட்டில் இடையிடையே அமைக்கப்பட்ட பாலத்தின் இரு ஓரங்களிலும் ரோடு தாழ்வாகியுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனர்.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி பாலத்தில் இருந்து கொக்கூரணி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோடு கடந்த ஆண்டு பராமரிப்பு செய்யப்பட்டு ரோட்டின் குறுக்கே பல்வேறு பகுதிகளில் தண்ணீர் செல்வதற்கு வசதியாக குறிப்பிட்ட பகுதிகளில் துாம்பு பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ரோட்டில்குறுக்கே அமைக்கப்பட்ட துாம்பு பாலத்தின் இரு ஓரங்களிலும் தற்போது தாழ்வாகியுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தாழ்வாக உள்ள ரோடு தெரியாமல் விபத்துக்களில் சிக்குகின்றனர்.
குறிப்பாக இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள், இந்த ரோட்டில் உள்ள ஆபத்து தெரியாமல் விபத்துக்களில் சிக்குவது தொடர்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள துாம்பு பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்வதுடன், ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.