/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் ரோடு அமைக்கும் பணி தொய்வு: மக்கள் அவதி
/
கோயில் ரோடு அமைக்கும் பணி தொய்வு: மக்கள் அவதி
ADDED : செப் 12, 2024 04:35 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பெருமாள் கோயில் பின்புறம் ரோடு அமைக்க தோண்டப்பட்டு ஒரு மாதமாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரோடு அமைக்கும்பணிகள் நடக்கிறது. இதன்படி வரதராஜ பெருமாள் கோயில், குருநாதன் கோயில் பின்புறம் ரோடு ஒரு மாதத்திற்கு முன்பு அகற்றப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் குண்டும், குழியுமாக உள்ள சூழலில் வீடுகளில் மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் ஆண்டு முழுவதும் அப்பகுதியில் சுவாமி ஊர்வலம் செல்லும் நிலை உள்ளது. ரோடு அகற்றப்பட்டதால் சுவாமி வீதி உலாவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துஉள்ளனர். டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.