/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஸ்மார்ட் வகுப்புகள் துவங்குவதில் தாமதம்
/
ஸ்மார்ட் வகுப்புகள் துவங்குவதில் தாமதம்
ADDED : ஜூன் 27, 2024 11:40 PM
திருவாடானை : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தின் வாயிலாக சிறந்த கல்வி கற்பிக்கும் நோக்கத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் உயர்தர ஆய்வகங்கள் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
திருவாடானை யூனியனில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் அதற்கான தனி வகுப்பறைகள் தயாராக வைக்க கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கல்வியாண்டு துவங்கி வகுப்புகள் நடந்து வருகிறது. இன்னமும் ஸ்மார்ட் வகுப்பு துவங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
தொடக்கபள்ளி தலைமைஆசிரியர்கள் கூறுகையில், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு இன்னும் கருவிகள் வரவில்லை. கருவிகள் வந்து இணையதள இணைப்பு பெற்றவுடன் தொழில்நுட்பக் குழுவினர் பள்ளிகளை பார்வையிட்டு அதற்கான சாதனங்களை பொருத்தி சோதனை செய்த பிறகுதான் முழுமையான ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கும் என்றனர்.

