/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த தடுப்பணைகளை ஊராட்சிகள் சீரமைக்க கோரிக்கை தரமற்ற பணிகளால் அரசு நிதி வீணடிப்பு

ADDED : செப் 03, 2024 04:58 AM
கடலாடி : கடலாடி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகளில் 2018 முதல் 2022 வரை நுாறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு தரமற்ற பணிகளால் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை நீரை சேகரிக்கவும் வெள்ள நீரை பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் பெரும்பாலான இடங்களில் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.
ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பயனில்லாமல் சேதமடைந்துள்ளது. தரமற்ற கட்டுமானப் பணியால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
வாலிநோக்கம், கடலாடி அருகே கொம்பூதி, கடுகுச்சந்தை, சிக்கல், டி. கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் சேதமடைந்து விரிசலுடன் காணப்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது: தடுப்பணைகளால் விவசாயத்திற்கும் விளை நிலங்களுக்கும் எதிர்பார்த்த பயன் இல்லை. முறையாக தடுப்பணைகளை கட்டினால் அவற்றில் தேங்கும் நீரால் பயன் கிடைக்கும். தற்போது தடுப்பணையின் அடித்தள பிளாட்பாரம் சேதமடைந்தும் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. எனவே தடுப்பணைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும். சேதமடைந்த பயன்பாடில்லாத தடுப்பணைகளை கண்டறிந்து மராமத்து பணிகளை உரிய முறையில் மேற்கொண்டு வர்ணம் பூச வேண்டும்.
விவசாயிகளிடம் கருத்து கேட்டு தேவையான இடங்களில் தடுப்பணை அமைக்க இனிவரும் காலங்களில் முன்வர வேண்டும் என்றனர்.