/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் காஸ் பதிய அலைமோதும் கூட்டம் முகாம் அமைக்க கோரிக்கை
/
கீழக்கரையில் காஸ் பதிய அலைமோதும் கூட்டம் முகாம் அமைக்க கோரிக்கை
கீழக்கரையில் காஸ் பதிய அலைமோதும் கூட்டம் முகாம் அமைக்க கோரிக்கை
கீழக்கரையில் காஸ் பதிய அலைமோதும் கூட்டம் முகாம் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 25, 2024 07:19 AM
கீழக்கரை, : கீழக்கரையில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் பயனாளிகளிடம் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கீழக்கரை, தில்லையேந்தல், காஞ்சிரங்குடி, மாயாகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காஸ் ஏஜென்சியின் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து ரேகை பதிவு செய்து திரும்புகின்றனர்.
தற்போது கொளுத்தும் கோடை வெயிலால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். கீழக்கரை கிழக்குத் தெருவை சேர்ந்த சமூக சேவகர் முகம்மது அஜீகர் கூறியதாவது:
பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து கைரேகை வைத்து செல்கின்றனர். தற்போது கொளுத்தும் கோடை வெயிலால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே கீழக்கரையில் பொதுமக்களின் நலன் கருதி நான்கு இடங்களில் முகாம் அமைத்து கைவிரல் ரேகை பதிவு செய்வதற்கு வழிவகை செய்தால் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றார்.