நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: -முதுகுளத்துாரில் மின் கட்டணம் உயர்வை திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் குருவேல் முன்னிலை வகித்தார்.
மின் கட்டணம் உயர்வை கண்டித்தும், மின் கட்டணம் உயர்வை திரும்ப பெறக் கோரி கட்சியினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன், மின் ஊழியர் சங்க நிர்வாகி பூப்பாண்டி, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி முனியசாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.