ADDED : ஜூன் 17, 2026 02:50 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மின்வாரிய தலைமை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் ராமநாதபுரம் திட்ட கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மண்டல செயலாளர் வீரசேகர் தலைமை வகித்தார். ராமநாதபுரம் திட்ட அமைப்புச் செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
இதில் ஒற்றைக் கோரிக்கையாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியாளராக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரை கள உதவியாளராக மாற்றக்கோரி கோஷமிட்டனர். நிர்வாகி ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.––––––
