ADDED : ஆக 15, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: தமிழகம் முழுவதும் விவசாய பயிர் கடனை தள்ளுபடி செய்வது, மேகதாது பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.
எம்.பி., தர்மர், முன்னாள் மாவட்ட செயலாளர் சவுந்திரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., மலேசியா பாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அப்போது த.வெ.க., அரசின் செயல்பாடுகளை கண்டித்து கோஷமிட்டனர்.
