/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
/
ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED : செப் 02, 2024 03:50 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று விடுமுறையையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பிறகு கோயிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னதிகளில் நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.