ADDED : பிப் 26, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக்கோயில் தெப்பக்குளம் மேல்கரையில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பை எரிக்கபடுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குப்பையை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும். அதைவிட்டு சேகரிக்கும் குப்பையை ஆங்காங்கே கொட்டி எரிக்கின்றனர்.
புகையால் கோயிலுக்குள் இருக்கும் பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
சம்பந்தபட்ட நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.