/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
ADDED : செப் 08, 2024 04:27 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் சந்தைப்பேட்டையில் உள்ள வல்லபை விநாயகர் கோயில், சிவன் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி, முகவையூருணி வடகரையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயில், ராமநாதபுரம் வடக்குத்தெரு சித்தி விநாயகர் கோயில், ஓம்சக்தி நகர் வலம்புரி வெற்றி விநாயகர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள செல்வராஜ மஹா கணபதி கோயில்.
ராமநாதபுரம் காசுக்கடை பஜாரில் உள்ள கற்பூர சுந்தர விநாயகர், அரண்மனை கோட்டை வாசல் விநாயகர், சிதம்பரம்பிள்ளை ஊருணி கரையில் அமைந்துள்ள சொர்ண விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ------*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி, தெப்பக்குளம், கைலாச விநாயகர், பாரதிநகர் கற்பக விநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார், பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி மற்றும் கிராமங்களில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொண்டி அருகே முள்ளிமுனை மற்றும் சின்னத்தொண்டி கிராமங்களில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. மாலையில் கடலில் கரைக்கப்பட்டது. வீடுகளில் அதிகாலையில் பெண்கள் எழுந்து வாசலில் மாக்கோலமிட்டனர். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வீட்டில் வைத்து மலர், மாலைகளால் அலங்கரித்தனர். பொங்கல், கொழுக்கட்டை, எள் உருண்டை, சுண்டல், பொட்டு கடலை, பழங்கள் வைத்து தேங்காய் உடைத்து குடும்பத்துடன் வழிபட்டனர்.
*திருப்புல்லாணி அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் கனவில் வந்த கணேசர் கோயிலில் காலை 10:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது.
வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள வல்லபை விநாயகருக்கு கொழுக்கட்டை, மோதகம், அவல்,பொரி கடலை படைத்து தலைமை குருசாமி மோகன் பூஜை செய்தார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
வீடுகளில் களி மண்ணால் ஆன பிள்ளையார் மற்றும் வண்ணம் தீட்டப்பட்ட அச்சு பிள்ளையார் உள்ளிட்டவைகளை பூஜையறையில் வைத்து அருகம்புல், எருக்கு மாலை, மலர்களால் அலங்கரித்து பூஜை செய்தனர். கொழுக்கட்டை, மோதகம், அவல்,பொரி கடலை, சுண்டல், பழங்கள் உள்ளிட்டவைகளை நெய்வேத்தியம் செய்து வழிபாடு செய்தனர்.
---