/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீயணைப்பு வாகனத்திற்கு தண்ணீர் நிரப்புவதில் சிரமம்
/
தீயணைப்பு வாகனத்திற்கு தண்ணீர் நிரப்புவதில் சிரமம்
தீயணைப்பு வாகனத்திற்கு தண்ணீர் நிரப்புவதில் சிரமம்
தீயணைப்பு வாகனத்திற்கு தண்ணீர் நிரப்புவதில் சிரமம்
ADDED : மே 06, 2024 12:29 AM
திருவாடானை : திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் தீயணைப்பு நிலையம் உள்ளது.
தொண்டி, எஸ்.பி. பட்டினம், காரங்காடு, முள்ளிமுனை போன்ற நீண்ட துார கிராமங்களுக்கு சென்று தீ விபத்து தடுப்பு பணியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர்.
இங்கு அமைக்கபட்ட ஆழ்துளை கிணறு உப்பு நீராக இருப்பதால் வாகனத்தில் அந்த நீரை நிரப்ப முடியாது. இதனால் குழாய் மூலம் வரும் நீரை சேகரித்து வாகனத்தில் நிரப்புகின்றனர். ஆனால் குழாயிலிருந்து வரும் நீர் சொட்டு, சொட்டாக வடிவதால் வாகனத்திற்கு போதிய நீர் கிடைக்கவில்லை.
இது குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ஆழ்துளை கிணறு உப்பு நீராக இருப்பதால் வாகனம் பழுதாகிவிடும். குழாயிலிருந்து வரும் நீரை தொட்டியில் நிரப்பி வாகனத்தில் நிரப்புகிறோம். ஆனால் குழாய் நீர் போதுமானதாக இல்லை. சொட்டு, சொட்டாக வடிவதால் நீரை சேகரிக்க முடியவில்லை. வெளியூர் செல்லும் போது ஊருணிகளில் தேங்கியிருக்கும் நீரை சேகரிக்கிறோம்.
மேலும் தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனம் செல்ல ஏதுவாக அமைக்கபட்டுள்ள தார்சாலை சேதமடைந்துள்ளது. இதனால் அவசரத்திற்கு விரைவாக செல்ல முடியவில்லை. என்றனர்.