/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் ஆதார் எடுப்பதில் சிரமம் கூடுதல் மையம் அமைக்க கோரிக்கை
/
கீழக்கரையில் ஆதார் எடுப்பதில் சிரமம் கூடுதல் மையம் அமைக்க கோரிக்கை
கீழக்கரையில் ஆதார் எடுப்பதில் சிரமம் கூடுதல் மையம் அமைக்க கோரிக்கை
கீழக்கரையில் ஆதார் எடுப்பதில் சிரமம் கூடுதல் மையம் அமைக்க கோரிக்கை
ADDED : மே 28, 2024 06:17 AM
கீழக்கரை : கீழக்கரையில் ஆதார் கார்டு புதிதாக எடுக்கவும், திருத்தம் செய்வதற்கும் போதிய மையங்கள் இன்றி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கூடுதலாக ஆதார் மையங்கள் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
கீழக்கரை நகராட்சியில் ஆதார் எடுப்பதற்கும், முகவரி மாற்றம், புதுபித்தல், அலைபேசி எண் இணைப்பு இவற்றில் உள்ள திருத்தங்கள் உட்பட ஆதாரின் பல வேலைகளுக்கு பொதுமக்கள் நாள்தோறும் அலைந்த வண்ணம் உள்ளனர்.
சில வங்கிகள் மற்றும் தாபல் நிலையம், நகராட்சி அலுவலகம் போன்ற இடங்களில் ஆதார் பணியை மேற்கொள்கின்றனர். தற்போது கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆதார் மையம் தற்போது இல்லை.
போஸ்ட் ஆபீசிலும் ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டுவதால் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்புகின்றனர். கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மையத்தில் ஆதார் எடுக்க மக்கள் குவிகின்றனர். ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.
காலை 9:45 முதல் 10:00 மணிக்குள் டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின் வருபவர்களை நாளை வாருங்கள் என்றும் 10:00 மணிக்குள் வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் வீண் அலைச்சலை பொதுமக்கள் சந்திக்கின்றனர்.
இதே நிலை தான் கீழக்கரை தாலுகா அலுவலகத்திலும். இங்கும் 40 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டாலும் தொடர் மின்தடை, நெட்வொர்க் பிரச்னை என தடங்கல்கள் நிகழ்வதால் 25 முதல் 30 பேருக்கு மட்டுமே தாலுகா அலுவலகத்தில் வேலை நடக்கிறது.
எனவே கீழக்கரை நகராட்சியில் இரண்டு பேரை பணியமர்த்தி ஆதார் அட்டை பணிகளை மேற்கொண்டால் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.