/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'ஒன் ஸ்டாப் சென்டர்' சிறப்பாக செயல்பட மாவட்ட முதன்மை நீதிபதி ஆலோசனை

ADDED : மே 17, 2024 07:12 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் செயல்படுத்தப்படும் 'ஒன் ஸ்டாப்' சென்டரை சிறப்பாகசெயல்படுத்த மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு ஆலோசனைவழங்கினார்.
பாலியல் வழக்கில் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளைபாதுகாக்க ஒன் ஸ்டாப் மையம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த மையம் குறித்த ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம்ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்று முறை சமரச தீர்வு மையத்தில் நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பொறுப்பு நீதிபதி சதீஸ், அலுவலர்கள், வழக்கறிஞர்கள், சட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஒன் ஸ்டாப் மையத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு ஆலோசனைகளை வழங்கினார்.