/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி
/
மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி
ADDED : மார் 03, 2025 05:50 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் டேக்வாண்டோ சங்கம் சார்பில், நேஷனல் அகாடமிபள்ளி உள் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது.
போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
மண்டபம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
செய்யது அம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் முதலிடத்தை பெற்றது.
நேஷனல்மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி 2ம் இடமும், உச்சிபுளி நேஷனல்அகாடமி மெட்ரிக் பள்ளி 3ம் இடம் பிடித்தனர்.
பரிசளிப்பு விழாவிற்கு ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர்எண்-1 மாஜிஸ்திரேட் நீலேஸ்வரன் தலைமை வகித்து, பரிசு வழங்கினார்.
டேக்வாண்டோ சங்க மாநில தலைவர் சாக்ரடீஸ், கராத்தே மாஸ்டர் கண்ணன், சர்வதேச நடுவர் ராமலிங்க பாரதி, மாவட்ட செயலாளர்கள் தென்காசி செல்வன், பெரம்பலுார் மேத்யூஆகியோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்டடேக்வாண்டோ சங்க செயலாளர் கர்ணா, இணைச் செயலாளர்முனியசாமி ஆகியோர் செய்தனர்.