/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 04:16 AM

ராமநாதபுரம், : -மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு எந்த சிறப்பு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தி.மு.க., வினர் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், நவாஸ்கனி எம்.பி., ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் தங்கவேலன், சுந்தரராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன் நன்றி கூறினார். மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.