/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திரவுபதி அம்மன் கோயில் தவசு கடப்பலி
/
திரவுபதி அம்மன் கோயில் தவசு கடப்பலி
ADDED : ஆக 29, 2024 04:58 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.9ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு ஆவரேந்தல் கிராமத்தார் மண்டகப்படி நிகழ்வாக தவசு கடப்பலி நிகழ்வு நடைபெற்றது.
மகாபாரத நிகழ்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக கிராமத்தார் சார்பில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யப்பட்டது. நேற்று ஆர்.எஸ்.மங்கலம் கிராமத்தாரின் வீமன் வேட நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக ஒவ்வொரு கிராம நிகழ்வு என 11 கிராமத்தாரின் வீமன் வேட நிகழ்வுகள் நடைபெற்றிருந்த நிலையில் நேற்று கடைசி வீமன் வேட நிகழ்வாக ஆர்.எஸ். மங்கலம் சார்பில் நடந்தது. ஆக.30ல் கொத்திடல், களக்குடி கிராமத்தாரின் மண்டகப்படி நிகழ்வாக முக்கிய விழாவான பூக்குழி விழா நடக்கிறது.

