/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிக்கல் பஸ் ஸ்டாப்பில் குடிநீர் வசதி தேவை
/
சிக்கல் பஸ் ஸ்டாப்பில் குடிநீர் வசதி தேவை
ADDED : செப் 14, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல் : சிக்கல் பஸ் ஸ்டாப் பயணிகள் நிழற்குடையில் குடிநீர் வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
சிக்கல் சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இப்பகுதியில் பொருட்கள் வாங்குவதற்காக வருகின்றனர். இரும்பு கம்பி மற்றும் தகரத்தாலான 2011 ல் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை பராமரிப்பின்றி பொலிவிழந்துள்ளது.
இங்கு கிராம மக்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டி எதுவும் வைக்கப்படவில்லை. சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பால் போதிய இடவசதியின்றி பொதுமக்கள் வெயிலில் நிற்கின்றனர்.
எனவே குறைகளை நிவர்த்தி செய்ய சிக்கல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.