UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 04:34 PM

அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமலில் இருந்தாலும் கடைக்கோடி கிராமங்களுக்கு போதிய அழுத்தம் இல்லாததால் குடிநீர் விநியோகம் கிடைக்கவில்லை. இதனை போக்க கூடுதல் குடிநீரை கொண்டு வரும் வகையில் புதிய எம்.வி.எஸ். திட்டத்தில் கூடுதல் குழாய்கள் பதிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை– தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கையில் இருந்து இப்பணிகள் துவங்கியுள்ளன. திருவாடானை அருகே அச்சங்குடியிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் பணிகள் நடந்து வருகிறது. பிப்.,க்குள் அனைத்து கட்டப் பணிகளும் முடியும் என்று குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
