UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 04:34 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே நீர்க்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் 55.
இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு சில நாட்களுக்கு முன்பு எரிந்தது. புகாரில் திருவாடானை போலீசார் விசாரித்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த சரத்குமார் 22, என்பவர் திருஞானசம்பந்தத்திற்கு சொந்தமான வைக்கோல் படப்பிற்கு தீ வைத்தது தெரிந்தது. சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.
