/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளுக்கு நிதி வராததால் அடிப்படை வசதிகளில் தொய்வு
/
ஊராட்சிகளுக்கு நிதி வராததால் அடிப்படை வசதிகளில் தொய்வு
ஊராட்சிகளுக்கு நிதி வராததால் அடிப்படை வசதிகளில் தொய்வு
ஊராட்சிகளுக்கு நிதி வராததால் அடிப்படை வசதிகளில் தொய்வு
ADDED : செப் 14, 2024 04:42 AM
திருவாடானை: ஊராட்சிகளுக்கு வர வேண்டிய நிதி இரு மாதங்களாகியும் வராததால் அடிப்படை வசதிகளை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஊராட்சிளில் வசூல் செய்யப்படும் வீட்டு வரி, தொழில் வரி, கடைகளுக்கான வரி என அனைத்து வரிகளும் ஆன்-லைன் மூலம் சென்னையில் உள்ள தனி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. அங்கு வரவு வைத்த பின் மீண்டும் அதே ஊராட்சிகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
ஊராட்சிகளுக்கு வரும் இந்த நிதியை கொண்டுதான் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகங்கள் கவனித்து வருகின்றன.
ஆனால் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளில் பெரும்பாலான ஊராட்சிகளுக்கு இரு மாதங்களாக இந்த நிதி வரவில்லை.
ஊராட்சி நிர்வாகங்களின் காலம் இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் கடைசி காலக் கட்டத்தில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட தேவைகளை சரியாக செய்ய வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் நிதியையும் நிறுத்தியுள்ளதால் ஊராட்சி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஊராட்சி மக்களின் நலன் கருதி வரி வசூல் நிதியை விரைந்து வழங்க வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.