/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இல்லம் தேடி கல்வி மீளாய்வு கூட்டம்
/
இல்லம் தேடி கல்வி மீளாய்வு கூட்டம்
ADDED : ஆக 08, 2024 04:27 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்ட அரங்கத்தில் இல்லம் தேடிக் கல்வி 2.O மீளாய்வு கூட்டம் நடந்தது.
உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஊடக அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி முன்னிலை வகித்தனர்.புதிய மையங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், செயலியில் மாணவர் எண்ணிக்கையை உறுதி செய்தல் குறித்து மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் லியோன் விளக்கி பேசினார்.
ஆக.1 முதல் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் நடத்தும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு சார்ந்து வட்டார வாரியாக மீளாய்வு நடந்தது.
கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம் செந்துார் முருகன், ஆர்.எஸ்.மங்கலம் கண்ணன், திருப்புல்லாணி, மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்ததன்னார்வலர்கள் பங்கேற்றனர்.