நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: முன்னாள் முதல்வர் பழனிச்சாமியை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அவதுாறாக பேசியதாக கூறி அ.தி.மு.க.,வினர் கடந்த சில தினங்களாக அண்ணாமலை உருவ பொம்மையை எரித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பா.ஜ.,வினர் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே முன்னாள் ஒன்றிய தலைவர் சசிக்கனி தலைமையில் பழனிச்சாமி உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் பா.ஜ., நிர்வாகிகள் வடிவேலன், ரவிச்சந்திரன், செல்லத்துரை, சசிகுமார், பாண்டித்துரை, செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். உருவ பொம்மை எரித்த பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.

