/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் கடலில் புதிய ரயில் துாக்கு பாலத்தில் மின்கம்பி பொருத்தினர்
/
பாம்பன் கடலில் புதிய ரயில் துாக்கு பாலத்தில் மின்கம்பி பொருத்தினர்
பாம்பன் கடலில் புதிய ரயில் துாக்கு பாலத்தில் மின்கம்பி பொருத்தினர்
பாம்பன் கடலில் புதிய ரயில் துாக்கு பாலத்தில் மின்கம்பி பொருத்தினர்
ADDED : செப் 04, 2024 01:48 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தில் மின் கம்பிகளை ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் பொருத்தினர்.
பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் தற்போது 650 டன் துாக்கு பாலத்தை இரு பாலத்துடன் பொருத்தும் பணி முழு வீச்சில் நடக்கிறது. இந்த துாக்கு பாலத்தை செப்.,20 க்குள் பொருத்தியதும் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் துாக்கு பாலத்தை லிப்ட் முறையில் திறந்து மூட பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே 2.1 கி.மீ., பாலத்தில் மின்சார ரயில் செல்வதற்காக மின் கம்பம், கம்பிகள் பொருத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று முதல் துாக்கு பாலத்திலும் மின்சார கம்பிகள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணியும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.