/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்வாரிய ஊழியர் தர்ணா போராட்டம்
/
மின்வாரிய ஊழியர் தர்ணா போராட்டம்
ADDED : பிப் 26, 2025 07:16 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் மின் வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்திதர்ணா போராட்டம் நடத்தினர்.
மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு திட்டத்தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொருாளளர் ஆரோக்கியம் முன்னிலை வகித்தார்.
மின் வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரபாபு போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
திட்ட செயலாளர் காசிநாதன், ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்க மாநில செயலாளர் மாலா, பொறியாளர் அமைப்பின் பழனிக்குமார், சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சந்தானம், மின் ஊழியர் அமைப்பின் நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர். மாநில துணைத்தலைவர் குருவேல் நிறைவு செய்து பேசினார்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.
ஊதிய உயர்வு, வேலைப்பளு பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கணக்கீட்டாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கேங்மேன் அனைவரையும் கள உதவியாளர்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட துணை செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.