/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் பூ பல்லக்கில் வைகையில் இறங்கினார்
/
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் பூ பல்லக்கில் வைகையில் இறங்கினார்
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் பூ பல்லக்கில் வைகையில் இறங்கினார்
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் பூ பல்லக்கில் வைகையில் இறங்கினார்
ADDED : மே 24, 2024 02:15 AM

குதிரை வாகனத்தில் கோலாகல புறப்பாடு
பரமக்குடி, மே 24-
-பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் வைகாசி வசந்தோற்ஸவ விழாவில் பூப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். பின் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி கோலாகலமாக வீதி வலம் வந்தார்.
எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி, வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.
இங்கு நேற்று முன்தினம் காலை வசந்த உற்ஸவ விழாவில் பெருமாளுக்கு கும்ப திருமஞ்சனம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் நாள் முழுவதும் பெண்கள் மாவிளக்கு ஏற்றினர்.
விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
பின்னர் கோயிலில் இருந்து மேள தாளம் முழங்க, வாண வேடிக்கை காட்சிகளுடன் புறப்பாடாகி கருப்பண சுவாமியிடம் சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து காலை 5:30 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பல்வேறு மண்டகப்படிகளில் சேவை சாதித்தார்.
பின்னர் காலை 10:00 மணிக்கு குதிரை வாகனத்தில் பெருமாள் அலங்காரமாகி பரமக்குடியில் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.
மாலை 5:00 மணிக்கு வைகை ஆற்றில் ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்து பின்னர் எமனேஸ்வரம் பகுதிகளில் வலம் வந்து வண்டியூரை அடைந்தார்.
இன்று சேஷ வாகனத்தில் பெருமாள் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து அவதார சேவையில் அருள் பாலிக்க உள்ளார்.
மேலும் கருடன், அனுமன் வாகனங்களில் சேவை சாதித்தும், மே 27 இரவு வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 10:00 மணிக்கு மீண்டும் கோயிலை அடைவார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவேராஷ்டிரா சபை நிர்வாகிகள், கவுன்சிலர்கள் செய்துள்ளனர்.