நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: சிவகங்கை அருகே பாகனேரியை சேர்ந்தவர் சுப்ரமணியன் 50. இவரதுமண் அள்ளும் இயந்திரத்தை உத்தரகோசமங்கை செல்லும் வழியில் ஆனைக்குடி விநாயகர் கோயில் அருகில் ஆக.18 இரவு நிறுத்தியிருந்தார்.
நேற்று முன்தினம் காலை பார்த்த போது அதிலிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான ஹைட்ராலிக் பம்பு மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சைலன்ஸர் திருடு போனது தெரிய வந்தது. கீழக்கரை போலீசில் சுப்பிரமணியன் புகார் அளித்தார். கீழக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

